கடன் தள்ளுபடி விவகாரத்தில் தன் தவறுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்த  ONEINDIA !

கடன் தள்ளுபடி விவகாரத்தில் தன் தவறுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்த ONEINDIA !

Share it if you like it

  • சமீபத்தில் வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாக தினகரன், தினத்தந்தி,  oneindia போன்ற ஊடகங்கள் ஒரு பொய்யான செய்தியை ஒளிபரப்பியது.
  • write off’ என்றால் தள்ளுபடி என்று அர்த்தமல்ல. ‘தள்ளி வைப்பு’ என்று அர்த்தம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். இந்நிலையில் இதுபோன்ற ஒரு பொய் செய்தியை மக்களிடையே பரப்பி மத்திய அரசுக்கு அவதூறு நேரும் வகையில் வெளியிட்ட குற்றத்திற்காக வழக்கறிஞர் ஆர்.ராமலிங்கம் என்பவர் நேற்று தினகரன், தினத்தந்தி,  oneindia ஆகிய மூன்று  ஊடக நிறுவனத்திற்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
  • இதற்கு oneindia செய்தி ஊடகம் தன் தவறை உணர்ந்து பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி  கடனை தள்ளுபடி செய்யவில்லை, அதை ஆர்பிஐ விதிமுறைகள் படி அந்த 50 பேரிடம் இருந்தும் கடனை திருப்பி வசூலிக்க எல்லா நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்படும் எனவும் விளக்கி இருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

  •  கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று one india செய்தி நிறுவனம் தனது வலை தளத்தில் விளக்கமான செய்தியையும் பிரசுரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • மேலும் இந்த கடன் தள்ளுபடி என்ற பொய்யான செய்தியை பரப்பியதற்காக தினகரன், தினத்தந்தி, oneindia ஊடகத்தின் மீது பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் அவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

கடன் தள்ளுபடி என பொய் செய்தி பரப்பிய ஊடகங்கள் மீது வழக்கறினர் அஸ்வத்தாமன் காவல் நிலையத்தில் புகார் !


Share it if you like it