பெங்களூரை சேர்ந்த, அபிக்யா ஆனந்த் என்னும் சிறுவன். கடந்த ஆகஸ்ட் மாதம் 22, அன்று, தனது யூடியூப் சேனலில், நவம்பர் 2019 முதல் 2020 ஏப்ரல் வரை. உலகம் ஒரு கடினமான சூழ்நிலையை சந்திக்கும் என்று, காணொலி ஒன்றினை வெளியிட்டு இருந்தான்.
அந்த 6 மாத காலப்பகுதியில் உலகம், ஒரு நோய் தொற்று பரவுதல் மூலம் கடுமையாக, அவதியுறும். இதனால் ஒரு பதற்றமான நிலைக்கு உலகம் தள்ளப்படும். இருமல் மற்றும் தும்மல், இந்த நேரத்தில் பெரும்பாலும் அதிகம் இருக்கும். இதனால் நோய் மேலும் பரவும் என்று கூறியிருந்தான். கொரோனா தொற்றை பற்றி துல்லியமாக முன்பே கணித்து. இந்தியாவையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளான் அபிக்யா.
அண்மையில் மீண்டும் ஒரு காணொலியை வெளியிட்ட சிறுவன் அதில் இவ்வாறு கூறியுள்ளான்.
வரும் டிச.,20 ஆம் தேதி உலகை தாக்கும் புதிய பேரழிவு, அடுத்த ஆண்டு மார்ச், 31ம் தேதி வரை நீடிக்கும். இது கொரோனா தொற்றை, விட கொடியதாக இருக்கும். நம் நோய் எதிர்ப்பு சக்தியை, கூட்டினால் மட்டுமே, புதிதாக உருவாகும் தொற்றுகளிலிருந்து, நம்மை பாதுகாக்க முடியும் என்று எச்சரித்துள்ளான்.
விலங்குகளை கொல்வதை, நாம் நிறுத்த வேண்டும். இயற்கை அன்னைக்கு, எதிரான நடவடிக்கைகளால், நம் கர்மவினை உயர்கிறது. இதை நிறுத்தாவிட்டால், பூமித்தாயின் கோபத்திற்கு, நாம் ஆளாக நேரிடும். இறைச்சி விற்பனையாளர்கள், ஒரு தியாகமாக நினைத்து, தங்கள் தொழிலை நிறுத்த வேண்டும், என்று ஆனந்த் அக்காணொலியில் கூறியுள்ளான்.