Share it if you like it
மத்திய அரசு பதவி ஏற்றதில் இருந்து நாட்டின் வளர்ச்சிக்கா பல்வேறு அதிரடி நடவடிக்கைளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அண்மையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 12,000 குதிரைத் திறன் கொண்ட மிகவும் சக்தி வாய்ந்த ரயில் இன்ஜினை உருவாக்கி இருந்தது. உலகிலேயே உள்நாட்டில் தயாரிக்கும் 6 வது நாடாக இந்தியா தற்பொழுது மாறியுள்ளது.
இந்நிலையில் அரசியல் விமர்சகர் ரிஷி பக்ரீ தனது டுவிட்டரில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக அந்நிய செலாவணி இருப்பு 500 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக ரஷ்யா மற்றும் கொரியா 3 வது பெரிய அந்நிய செலாவணி இருப்பு வைத்திருந்தது தற்பொழுது இந்தியா அவ்விரு நாடுகளையும் முந்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
Share it if you like it