ஊரடங்கு உத்தரவு எதிரொலி- நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!

ஊரடங்கு உத்தரவு எதிரொலி- நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!

Share it if you like it

கொரோனா தொற்று மேலும் பரவாமல், இருக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கைளை, எடுத்து வருகிறது. பாரதப் பிரதமர் மோடி, உத்தரவை அடுத்து மாநில அரசுகளும், மக்கள் நலன் சார்ந்து சிறப்பு, அறிவிப்புகளை தெரிவித்து வருகின்றன. மாதம் தோறும் மன்கீ பாத், மூலம் வானொலியில் மோடி, மக்களிடம் தொடர்பில் இருந்து வருகிறார். அதேப் போன்று மீண்டும், மன்கீத் பாத்தில் மோடி  இவ்வாறு கூறியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நாட்டு, மக்களின் நலன் கருதியும், சர்வதேச மருத்துவ கழகங்களின் வழிகாட்டுதல், படியும் இந்நடவடிக்கையே மேற்கொண்டேன். எண்ணற்ற ஏழை தாய் மார்கள், சகோதரர்கள், சகோதரிகள், ஊரடங்கு உத்தரவால் மிகுந்த மன வருத்ததிலும், கவலையிலும் இருப்பீர்கள், என்பதை நான் நன்கு உணர்வேன்.

மோடி இப்படி செய்து விட்டாரே, என்று உங்களின் எண்ண ஓட்டத்தையும், நான் அறிவேன். மக்களின் உடல் ஆரோக்கியமே, எனக்கு மிகவும் முக்கியம். உங்களின் பொறுமைக்கு, தலை வணங்குகிறேன். இன்னும் சிறிது நாட்கள், பொறுத்திருக்குமாறு அன்புடன் கேட்டு கொள்வதாகவும், ஊரடங்கு உத்தரவுக்காக, நாட்டு மக்களிடம் எனது மன்னிப்பை தெரிவித்துக் கொள்வதாக மோடி கூறியுள்ளார்.


Share it if you like it