கொரோனா வைரஸ் சீனாவையே நிலைகுலைய வைத்தது மட்டுமில்லாமல் வுஹான் மாகாண மக்களின் வெளி உலக தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு அவர்களின் நிலை என்னவென்றே அறியமுடியாத நிலை நிலவி வருகிறது.
மேலும் அந்நாட்டின் வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்க்கொண்டதே இல்லை என்னும் அளவு தொற்றுநோய் கிருமியால் பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளதாக அந்நாடு கருதுகிறது.
இந்நிலையில் கிறிஸ்தவ மிஷனரிகள் கொரோனா வைரஸ் பாதிப்பை பயன்படுத்தி “நற்செய்தியைக் கொண்டுவருவதற்கும்” வுஹானில் உள்ள மக்களை மாற்றுவதற்கும் இந்த ‘வாய்ப்பை’ பயன்படுத்திக்கொள்ளவும்.
இயேசு கிறிஸ்துவின் செய்தியை பரப்புவதற்கும், ‘சீனாவில் கிறிஸ்துவின் ராஜ்யத்தை’ உருவாக்கவும் கிறிஸ்தவ அமைப்புகள் தங்கள் மிஷனரிகளை வலியுறுத்துகின்றன என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் மதம் மாற்றுவதே முக்கிய நோக்கமாக இருப்பதும், வெகு விரைவில் வைரஸ் கிருமியை கூட விட்டு வைக்கமாட்டார்கள் என்னும் அளவிற்கு தோன்றவதாக அனைவரின் கருத்தாக உள்ளது.
(பி.கு) வெளி உலக தொடர்பையே முற்றிலும் வெறுக்கும் அந்தமான் `சென்டினல்’ பழங்குடி மக்களை அமெரிக்காவை, சேர்ந்த ஜான் ஆலென் காவ் என்னும் (27) வயது மிக்க நபர் கையில் பைபிள், மீன்கள், கால்பந்து ஆகியவற்றுடன் அவர்களை மதம் மாற்ற சென்ற அவரை பழங்குடியின மக்கள் கொடுரமாக கொன்றது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.