எப்பொழுது இளைய தளபதியிலிருந்து தளபதியாக மாறினேனோ அப்பொழுதே ரெய்டும் ஆரம்பித்து விட்டது – நடிகர் விஜய் !

எப்பொழுது இளைய தளபதியிலிருந்து தளபதியாக மாறினேனோ அப்பொழுதே ரெய்டும் ஆரம்பித்து விட்டது – நடிகர் விஜய் !

Share it if you like it

  • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நேற்று நடந்தது. அதில் நடிகர் விஜய் பேசினார். வழக்கமாக எல்லா மேடையிலும் ஒரு குட்டி கதை சொல்லி கருத்து கூறுவார். அதேபோல் இந்த மாஸ்டர் ஆடியோ லான்ச் மேடையில் பேசினார். அதுமட்டுமல்லாமல் எப்பொழுதும் எளிமையான உடை அணிந்து வருவார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் மட்டும் கோட் சூட் போட்டு வந்தார். இதற்கு காரணம் கேட்டதற்கு தனது ஆடை வடிவமைப்பாளர் எப்பொழுதும் போல் போராக உடை அணிந்து செல்லாமல் கோட் சூட் போட்டு போக சொன்னார். அதனால்தான் நண்பர் அஜித் போல் கோட் சூட் போட்டு கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று கூறினார் விஜய்.
  • மேலும் அங்கிருந்த நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்தவர்கள் விஜயிடம் ஒரு கேள்வி கேட்டனர். என்ன கேள்வி என்றால் தற்போது உள்ள தளபதி விஜய் முந்தைய இளைய தளபதி விஜயிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்றால் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த விஜய், இளைய தளபதியாக இருக்கும் பொழுது நிம்மதியாக எந்த ரெய்டும் இல்லாமல் இருந்தேன். தளபதியானதால் ரெய்டால் கொஞ்சம் அவதிப்படுகிறேன் இருந்தாலும் இதுவும் ஜாலியாகத்தான் இருக்கிறது என்று கூறினார்.
  • மேலும் சமீபத்தில் இரண்டுமுறை நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it