எல்லை தொல்லை இனி இல்லை..! சறுக்கிய காங்கிரஸ் சாதித்து வரும் மோடி…!

எல்லை தொல்லை இனி இல்லை..! சறுக்கிய காங்கிரஸ் சாதித்து வரும் மோடி…!

Share it if you like it

பாதுகாப்பு விஷயத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு போல் அல்லாமல். மோடி தலைமையிலான அரசு எல்லை பகுதியில் சாலைகள், மேம்பாலங்கள், போன்றவற்றை அமைப்பதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இந்தியா வேகமாக அமைத்து வரும் சாலை பணிகளை பார்த்த பின்பே சீனாவிற்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனா ஆக்கிரமித்து வைத்துள்ள இந்திய பகுதியான அக்சாய் ஜின் பகுதியும் இச்சாலைகள் வழியே வருவது தான் இதற்கு முக்கிய காரணம். ஏற்கனவே நாடு பிடிக்கும் ஆசையில் உள்ள சீனாவிற்கு இது நடுக்கத்தை உருவாக்கியது. எல்லை பகுதியில் அத்துமீறி செயல்பட்டு 100 சீன ராணுவ வீரர்களை இழந்து கதறி கொண்டு இருக்கிறது அந்நாடு.

என் உயிரை கொடுத்தாவது அக்சாய் ஜின் பகுதியை மீட்பேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அண்மையில் கர்ஜித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. சீனாவை கண்டு நடுங்கிய சோனியா காந்தி காங்கிரஸ் அரசு அல்ல ஆளுமை மிக்க மோடி தலைமையிலான அரசு என்பதை சீனாவிற்கு இப்பொழுது தான் உறைக்க தொடங்கியுள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசு ஆட்சியில் எல்லை கோட்டு பகுதிக்கு இந்திய ராணுவ வீரர்கள் செல்லவே 18 நாட்கள் ஆகும். இப்பொழுது வெறும் 24 மணி நேரத்தில் ராணுவ வீரர்கள் அப்பகுதிக்கு செல்ல முடியும் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.

70 நாட்களுக்கும் மேல் இந்தியா, பூட்டான் எல்லை பகுதியில் கடும் பதற்றம் நிலவியது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் டோக்லோம் பகுதிக்கு இந்திய ராணுவம் செல்வதற்கு 7 மணி நேரம் ஆனது. தற்பொழுது 40 நிமிடங்களிலேயே அப்பகுதிக்கு இந்திய ராணுவம் செல்லும் வகையில் மத்திய அரசு தரமான சாலைகள் அமைத்துள்ளது.

ஜம்மூ- காஷமீர் பகுதியில் இருந்து ராணுவ வீரர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கு முன்பு 3 மணி நேரத்திற்கும் மேல் ஆகும். ஆனால் தற்பொழுது ராணுவ வீரர்கள் வெறும் சில மணித்துளிகளில் அப்பகுதிக்கு செல்லும் வகையில் தரமான வழியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. எந்த நாட்டிற்கும் சவால் விடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தை மோடி பலப்படுத்தி வருகிறார் என்பதற்கு இது சிறு உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் ஆட்சி இருந்தபொழுது ராணுவ அமைச்சர் ஏ.கே அந்தோணி உதிர்த்த முத்துக்கள்.

  • வளர்ச்சியடைந்த எல்லை பகுதிகளை விட வளர்ச்சி அடையாத எல்லைகளே பாதுகாப்பானது.
  • எல்லையை பலப்படுத்துவது அல்ல சிறந்த பாதுகாப்பு. இப்படி ஒரு ராணுவ அமைச்சரை உலகம் எங்காவது பார்த்திருக்குமா… 

ஆக்கம்- தஞ்சைதாசன்


Share it if you like it

One thought on “எல்லை தொல்லை இனி இல்லை..! சறுக்கிய காங்கிரஸ் சாதித்து வரும் மோடி…!

  1. At last we got a very powerful leader , ministers and majority Government. Bharat is not just a country . It is leading the entire world by its spiritual power.

Comments are closed.