இஸ்லாமிய மக்களின் பெரும் மதிப்புக்குரியவராக திகழக்கூடியவர் இமாம் தவிடி. சிறந்த வழக்கறிஞர் மட்டுமில்லாது, உலகம் முழுவதும் அமைதி, சகோதரத்துவம், பரவ வேண்டும் என்று பாடுபடக்கூடியவர். இவரின் ஆழமான பேச்சின் மூலம், மனித இனத்திற்கு தன்னால் இயன்ற, சேவை செய்து வருகிறார். அவ்வபொழுது இந்தியாவின் எண்ணத்தையும், சேவையையும், மனம் திறந்து இவர் பாராட்டுவதை, நாம் காண முடியும். ஆனால் இவரின் பேச்சு, எழுத்து, பிடிக்காத சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள், இவரின் உயிருக்கு குறி வைத்துள்ளனர் என்பது உலகம் அறிந்ததே.
https://twitter.com/imamofpeace/status/1160568511397109760?lang=en
காஷ்மீர் இந்தியாவிற்கு மட்டுமே சொந்தம், என்று பகிரங்கமாக தனது கருத்தை வெளிப்படுத்தியவர். பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் இரண்டும், இந்தியாவைச் சேர்ந்தவை, இந்தியா இஸ்லாத்தை விட பழையது, நேர்மையாக இரு, என்று பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கியவர். அண்மையில் இமாம் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
https://twitter.com/Imamofpeace/status/1240228474394050571
ஒவ்வொரு இஸ்லாமிய பயங்கரவாதியும், இந்தியாவை வெறுக்கிறார்கள் என்பது என்னை இந்தியாவை இன்னும், அதிகமாக நேசிக்க வைக்கிறது. என்று டுவிட் செய்திருப்பதற்கு ஒருபக்கம் பாராட்டும், மறுபக்கம் அடிப்படை இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.