ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தன் குடும்பத்தினருடன் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.வட இந்திய மாநிலங்களில் பனிமூட்டம் நிலவுகின்ற காரணத்தால் ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டது.அடுத்த ரயில் நிலையம் வர நேரம் இருந்துள்ளது.இதனால் செய்வதறியாது அக்குடும்பத்தின் தவித்தனர்.இந்த தகவல் அதே ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ராணுவ மருத்துவர்களான கேப்டன் லலிதா,கேப்டன் அமந்தீப் ஆகியோர்க்கு தெரிய வந்தது.அவர்கள் விரைந்து வந்து அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்தனர்.ரயிலிலேயே அப்பெண்ணிற்கு அழகிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது.இதுபற்றி இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது,”அதில் தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர்.தேசத்திற்குத்தான் எங்கள் முதல் சேவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த பதிவு தற்போது தேசிய அளவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவர்கள்!
Share it if you like it
Share it if you like it