Share it if you like it
கடந்த சில நாட்களுக்கு முன் 5 நாள் பயணமாக இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்தார்.அவரை பிரதமர் நரேந்திரமோடி கைகுலுக்கி வரவேற்றார்.ராஜபக்சே அவர்கள் தனது சுற்று பயணத்தை முடித்துக்கொண்டு கடைசியாக வாரணாசி சென்று புனித கங்கை நதியை பார்வையிட்டார்.இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியையும்,கங்கை நதியையும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியும் கங்கை நதியானது நமது நாகரிகத்தின் மையமாக உள்ளது.மேலும் இது நமது கலாச்சார மற்றும் பொருளாதார வாழ்வாதாரத்தை கொண்டுள்ளது.நீங்கள் வாரணாசி சென்று கங்கையை ரசித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது என்று அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
Share it if you like it