அமெரிக்கா, இலங்களை, மாலத்தீவு, இஸ்ரேல், கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு. மனிதாமான, அடிப்படையில் முககவசம், கையுறை, மருத்துவ உபகரணங்களை, இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கு அந்நாடுகளின் அதிபர், பிரதமர், முதற்கொண்டு அனைவரும் மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் இந்தியாவின் மீது தொடர்ந்து வன்முறை போக்கையே இன்று வரை தொடர்ந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 370 பிரிவை நீக்கியவுடன். உங்களிடம் இனி எந்த வர்த்தக தொடர்பும் இல்லை என்று அதிகாரபூர்வமாக அந்நாடு கூறிவிட்டது. இந்நிலையில்
கொரோனா தொற்று பாகிஸ்தானில் உச்சத்தில் இருப்பதால் அங்கு கடுமையான மருந்து பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதித்திருந்த தடையை நீக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் அரசு அந்நாட்டிற்கு மிகவும் தேவையான உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் வைட்டமின் மருந்து பொருட்களை இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.