தன் கீர்த்தனைகள் மூலம், உலக மக்களை எல்லாம் வசப்படுத்தியது மட்டுமில்லாமல். ராம பிரானே அவரின் இருப்பிடம் நாடி வரும் அளவிற்கு இசையில் கறை கண்டவர் திருவையாறு தியாகராஜ சுவாமிகள் என்று கூறினால் அதுமிகையன்று.
திராவிட சிந்தனை கொண்ட நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தி வரும் நடிகர் கமலும் இணைந்து காணொலி காட்சியில் உரையாற்றும் பொழுது.
தியாகராஜர் பற்றி, மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்த, நடிகர் கமலின் பேச்சு. இசையை நேசிக்கும் கோடிகணக்கான மக்களின் உணர்விலும் ஈட்டியை பாய்த்தது போல் இருந்தது. இதற்கு பக்தி பாடகர் வீரமணி, மற்றும் ஒரு சில இசை கலைஞர்கள் கமலுக்கு தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல இசை கலைஞர் பாலக்காடு ராம் பிரசாத் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
தியாகராஜரை பற்றி நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு, கண்டனம் தெரிவிக்கும் விதமாக கர்நாடக இசைக் கலைஞர்களிடம் தான் தயாரித்துள்ள மனுவில் கையெழுத்திடுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kamal Hassan: Condemning Kamal Hassan's statement on Thyagaraja – From Carnatic Musicians – Sign the Petition! https://t.co/rt64iYqjEN via @ChangeOrg_India
— Palghat Ramprasad (@palghat_ramp) May 6, 2020