மும்பை பகுதியில் வசித்து வரும் கரிஷ்மா என்னும் இளம்பெண் தன் வீட்டு அருகில் உள்ள மசூதியில் இருந்து தினம் 5 முறை மிக சத்ததுடன் இஸ்லாமிய மதப்பாடல் பாடப்படுவதாகவும். இதனால் தனக்கும் மற்றவர்களுக்கும் மிக சிரமமாக உள்ளது. தயவு செய்து ஒலியின் அளவை குறைக்குமாறு தனி ஒரு பெண்ணாக மசூதிக்கு சென்று முறையிட்டுள்ளார்.
உங்கள் மதப்பாடலை எங்கள் மீது ஏன்? திணிக்கிறீர்கள். மற்றவர்களின் சூழ்நிலையையும் புரிந்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து வாக்குவாதம் எல்லை மீறி போகவே அங்குள்ளவர்கள், சில இஸ்லாமிய பெண்களை அழைத்து வந்து கரிஷ்மாவிடம் சண்டையிட்டுள்ளனர். தனியாக வந்த கரிஷ்மாவை சிலர் அடிக்க சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் சமூக ஆர்வலர் ஆரிஃப் அஜாகியா கரிஷ்மாவிற்கு ஆதரவாக தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுதான் நான் பேசிக் கொண்டிருந்த சிக்குலரிசம். பெரும்பான்மையாக இருக்கும் மக்களை கவலையுற வைக்கும் சிக்குலாரிசம் இதுதான். சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். சிறுபான்மை உணர்வுகள் புண்படக்கூடாது, அதே நேரத்தில் பெரும்பான்மையினரின் உணர்வுகளுக்கு எந்த முக்கியத்துவமும் தரமால் இருப்பது போலித்தனம் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
even the police aren't spared,itni dadagiri pic.twitter.com/AwsjNhUJLl
— करिश्मा भोसले 🇮🇳 (@be_karishma) June 26, 2020