கலியுகத்தின் நிலை எப்படி இருக்கும் என்று சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1604-1693) தெலுங்கு தேசத்தில் வாழ்ந்த வீரபிரம்மேந்திர் என்பவர். “காலக்ஞானம்” என்னும் தீர்க்கதரிசனத்தை 14,000 ஒலைச் சுவடிகளில் எழுதியுள்ளார். அவர் கூறிய அனைத்தும் இன்று வரை நடைபெற்று வருவது ஆச்சரியமான ஒன்றாகும்.
1. ஆணுக்குப் பெண் வித்தியாசமற்று தோற்றத்திலும் செயலிலும் ஒன்றுபட்டுப் போகிறது.
2. தாய்தந்தையர்கள் ஆண் மக்களை நம்பாது பெண் பிள்ளைகளை நம்புவர்.
3. பெண்களின், தூய்மை, பெண் தன்மை மாயவசத்தால் அழிந்து போகும்.
4. ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற நிலை கெடும்.
5. அரசே பெண்களின் கருச்சிதைவுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்.
6. விதவை மறுமணம் செய்து கொள்வாள்.
7. மகன் தந்தையையும், தந்தை மகனையும் மோசம் செய்வர்; பந்த பாசங்கள் அற்றுப் போகும்.
8. தன் மகளின் கற்பை தந்தையே சூரையாடுவான்.
9. கணவனை நிந்தித்து துன்புறுத்தும் மனைவியும், பெற்ற தாய் தந்தையரைப் பேணாத மக்களும் பெருகிவிடுவர்.
10. பெற்ற மக்களையே விற்றுப் பிழைக்கும் நிலை பெற்றோருக்கு ஏற்படும்.
11. அழகுடைய மங்கையர் விலைபொருளாகி விற்பனைக்கு உள்ளாகுவர்.
12. திருமணங்கள்,குலம் கோத்திரமின்றி நடைபெறும். அதற்கு அரசே ஆதரவு அளிக்கும்.
தொடரும்…