அண்மையில் ராகுல் காந்தி காணொலி ஒன்றை வெளியிட்டு மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டு இருந்தார். கொரோனா தொற்று மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகம் உள்ளதே உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி நாங்கள் கூட்டணியில் மட்டுமே அங்கம் வகிக்கிறோம். ஆளும் கட்சி அல்ல என்று புதுவிதமான பதிலை கூறினார். ராகுலின் கருத்திற்கு மக்கள் மட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் கூட குபீர் சிரிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சட்டதுறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இவ்வாறு ராகுலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி அவர்களே ஊரடங்கு தீர்வு அல்ல என்று கூறுகிறீர்கள். பஞ்சாப், புதுச்சேரி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஆகிய காங்கிரஸ் மாநில முதல்வர்கள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லையா, அல்லது அவர்கள் உங்கள் கருத்துக்கு எந்தவிதமான மதிப்பையும் கொடுக்கவில்லையா? தற்பொழுது மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மே 31 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது அது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று மத்திய அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.