மாறி வரும் சமூக சூழ்நிலையில் தினமும் ஏதேனும் ஒரு பெண்ணோ, குழைந்தையோ தீய மனம் கொண்ட நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கோ, அல்லது கேலி,கிண்டலுக்கோ உள்ளாகும் கொடுமை நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
சில முரட்டு பலம் கொண்ட ஆண்களிடம் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் சாதனங்கள் சந்தையில் வந்துக்கொண்டே இருக்கின்றன. அண்மையில் தஞ்சை மாவட்டத்திலுள்ள தனியார் கல்லுரியில் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் படிக்கும் சங்கீதா, சவுந்தர்யா, வினோதினி என்னும் மாணவிகள் பெண்களை பாதுகாக்கும் காலணி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
அதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால். இந்த காலணி அணிந்திருக்கும் பெண்ணிடம் யாரவது அத்துமீறினால் அவரின் உடலில் ஏற்படும் பதட்டத்திற்கு ஏற்ப 100 மீ.,க்கு கேட்கும் அளவு அலார ஒலி எழும்பும்.
மேலும் அந்த காலணியை கழட்டி எதிரியின் மீது வைத்தால் அவர் நிலைதடுமாறி கீழே விழும் அளவிற்கு மின் அதிர்வு ஏற்படும். நாம் நடக்கும் பொழுதே இதனை ரீசார்ஜ் செய்துக்கொள்ள முடியும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
மேலும் சில மாறுதல்கள் செய்ய வேண்டியுள்ளதால் விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என மாணவிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டம் எவ்வளவு கடுமையாக இயற்றினாலும் இது போன்று பெண்களை பாதுகாக்கும் சாதனங்களை மத்திய, மாநில அரசுகள் இலவசமாக வழங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.