Share it if you like it
- சென்னை தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கிலும் கஞ்சா புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக காவல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
- இதனால் கஞ்சா விற்பவர்களை பிடிக்க தேனாம்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தி.நகர் தாமஸ் சாலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அந்த வீட்டில் சுமார் 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து பொட்டலங்களாக வைத்து சிலர் விற்பனை செய்து வந்துள்ளனர்.
- பின்னர் அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில் தி.நகர் பகுதியை சேர்ந்த பரமேஷ்வரன்(38), சுலோச்சனா(55), விக்னேஷ்(25)என்பது தெரியவந்தது. மேலும் இதில் பரமேஷ்வரன் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும், சுலோச்சனா திமுக மாவட்ட மகளிர் அணி தலைவியாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து தற்போது ஊரடங்கு என்பதால் 500 முதல் 1000 ரூபாய் வரை விற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- இன்று காலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு? என்று அதிமுக அரசைக் கண்டித்து கருப்பு உடையணிந்து பதாகை மற்றும் கருப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கமிட்டார். ஆனால் தற்போது திமுகவை சேர்ந்தவர்களே திருட்டுத்தனமாக கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்துள்ளனர்.
Share it if you like it