கடந்த 17ம் தேதி திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் இருந்து செயல்படும் கலைஞர் செய்தியில். இவன் தந்திரன் எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியில் காஷ்மீரை மூன்றாக பிரித்து இந்தியாவுடன் இணைத்து கொண்டது தான் இப்போதைய இந்திய சீன பிரச்சனைகளுக்கு காரணம் என செந்தில் என்பவர் பேசி உள்ளார். ஏதோ இதற்கு முன்னர் காஷ்மீர் தனி நாடக இருந்தது போன்றும்
370 சட்ட பிரிவு நீக்கத்திற்கு பிறகு தான் அது இந்தியாவுடன் இணைந்தது போன்றும் ஒரு பிம்பத்தை மக்கள் மனதில் உருவாக்க பார்க்கும் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும் காஷ்மீரை இந்தியா இரண்டு யூனியன் பிரதேசங்களாக தான் பிரித்துள்ளது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் மூன்றாக பிரித்தனர் என பொய்யான தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
இவற்றுக்கெல்லாம் மேலாக காஷ்மீர் விவகாரத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுக்காக சுமார் 10,000 யூதர்களை மோடி அரசு காஷ்மீரில் குடியேற்றி விட்டதாகவும் இந்த ராஜதந்திரங்களை தெரிந்து கொண்ட சீனா இப்போது காஷ்மீரை கைப்பற்ற நினைப்பதாக வெட்கமே இல்லாமல் சீன நடவடிக்கைகளை நியாயபடுத்தி உள்ளது கலைஞர் செய்தி.
1962ம் ஆண்டு இந்திய சீன யுத்தத்தின் போது ராணுவ வீரர்களுக்கு ரத்த தானம் செய்ய கூடாது என கம்யூனிஸ்ட் கட்சி தனது எல்லை தாண்டிய கட்சி விசுவாசத்தை காட்டியது உட்பட பல்வேறு விஷயங்களில் தேச விரோத முடிவுகளையே எடுத்து வருவது நமக்கு தெரிந்த விஷயமாக இருந்தாலும் அதன் கூட்டணி கட்சியான திமுகவும் இப்பொழுது மோடி எதிர்ப்பு என்ற பெயரில் தேச விரோத கருத்துக்களை வெளியிட்டு வருவதும், திமுக தலைவர் ஸ்டாலின் இவ்விஷயத்தில் மௌனம் காப்பதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.