அறிமுகம்:
பிப்ரவரி 22.2. 2020 அன்று, சனிக்கிழமை உலக பல்கலைக் கழக சேவை மையத்தில் மாலை 4 – 7 மணிக்கு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சுமார் 75 பேர் கலந்துக்கொண்டனர். இதில் பத்திரிகையாளர்கள், கல்லூரி மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தொல்பொருள் துறையின் அதிகாரிகள் மற்றும் பல துறைகளை சேர்ந்த பெரியோர்கள் கலந்து கொண்டனர்.
டாக்டர் பி.எஸ்.ஹரி சங்கர், உறுப்பினர், IIAS, சிம்லா, மற்றும் ஸ்ரீ. கல்வெட்டு ராமச்சந்திரன், (ஓய்வு) தமிழ்நாடு தொல்லியல் துறை, கல்வெட்டு ஆராய்ச்சியாளர். கீழடி மற்றும் பிற அகழ்வாராய்ச்சிகளின் பகுப்பாய்வு மற்றும் ஒப்பீடு பற்றிய விரிவுரைகளை வழங்கினர்.
டாக்டர் பி.எஸ்.ஹரி ஷங்கர், கீழடி ஆராய்ச்சியாளரின் உரை:
இப்போது இந்தியாவில் “கல்வியாளர்கள்”கட்டுப்படுத்தப்படுகின்றனர். வெளிநாட்டினரால் நிதியளிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று வேதனையுடன் தெரிவித்தார்.
“கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் கஸ்பர் மற்றும் வெளிநாட்டு நிதியுதவி பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் கீழடியில் அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் மற்றும் பதிவுகளை இந்திய கல்வி சமூகம் எப்படி ஏற்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பாதிரியார் ஜெகத் கஸ்பர், வழக்கறிஞர் கனிமொழி கீழடிக்கு விஜயம் செய்ததாகவும். கஸ்பர் ராஜின் தன்னார்வ தொண்டு நிறுவனமான தமிழ் மையம் ஒருங்கிணைப்பாளராக வழக்கறிஞர் கனிமொழி இன்றும் செயல்படுகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
“சர்ச்சைக்குரிய கத்தோலிக்க பாதிரியார் ஜெகத் கஸ்பர், விடுதலை புலிகளின் நிதி நடவடிக்கைகளுக்கு முன்னோடி என்று குற்றம் சாட்டப்பட்டவர். எல்.டி.டி.இ தொடர்புகள் மூலம், இவர் பணமோசடி செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. கீழடியில் இவர்களின் நோக்கம் செயல்படாதபடி தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேரளாவை சேர்ந்த டாக்டர் பி.எஸ்.ஹரி ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ.கல்வெட்டு ராமச்சந்திரன், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்:
ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள்:
ஆதிச்சநல்லூர் என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஒரு தொல் பொருள் இடமாகும். இது தாழி நாகரீகம். 100க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள் மற்றும் பல் கண்டுபிடிக்கப்பட்டது.அன்றைய காலக்கட்டத்தில் 25 சதவீதமாக எடுக்கப்படும் இரும்பு, ரசாயன கலவை மூலம் 63 சதவீதமாக உருமாறுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் உலோகத் துறையில் நாம் எந்த அளவில் முன்னேற்றம் அடைந்து உள்ளோம் என்பதை அறியலாம்.
அழகன் குளத்தில் அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள்:
அழகன்குளம் அகழ்வாராய்ச்சி, ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை நதி மற்றும் வங்காள விரிகுடா கடற்கரையின் அருகில் அமைந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி நடைபெறுகிறுது, முதல் ஆண்டு அறிக்கை மட்டுமே வந்தன, அதன் பிறகு அகழ்வாராய்ச்சி விவரங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தொல்பொருள் துறை, செங்கல் சுவர், போன்ற அமைப்பு மற்றும் சங்கு, வளையல் தயாரிக்கும் தொழில், இரும்பு உருக்கும் பட்டறை, டெரகோட்டா மற்றும் ரோமானிய நாணயங்கள், மண் பாண்டங்கள் இருப்பதற்கான சான்றுகளைக் கண்டறிந்துள்ளனர். இந்தியாவின் தெற்குப் பகுதிகள் முதல் இந்தியாவின் வடக்குப் பகுதிகள் வரை வர்த்தக உறவுகள் இருந்தன, இது பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பதை தெளிவாகக் இந்த அகழ்வாராய்ச்சி காட்டுவதாக கூறியுள்ளார்.
கொடுமணலில் அகழ்வாராய்ச்சி முடிவுகள்:
கொடுமணல் என்பது ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது ஒரு காலத்தில் கொடுமனம் என அழைக்கப்பட்டது. செழிப்பான பண்டைய வர்த்தக நகரமாக இருந்தது, இது சங்க இலக்கியத்தின் பரிபாடல் செய்யுளில் இடம் பெற்று உள்ளது. சேரன் அந்த இடங்களை ஆண்டார், அவர்கள் ரோமானியர்களுடன் நல்ல வர்த்தக உறவைக் கொண்டிருந்தனர். சேரன் வம்சம் இரும்பு உற்பத்தியில் மிகவும் திறமையானவர்கள்
“கீழடி அறிக்கைகள் விரைவில் வந்தன. ஆனால் முழுமையாக ஆய்வு செய்து அறிக்கைகள் கொடுக்கப்படவில்லை. அதேபோல் அழகன்குளம், ஆதிச்சநல்லூர், கொடுமணல் முழுமையாக அறிக்கைகள் இன்னும் வரவில்லை. ஆகவே இதில் அரசியல், மிஸனரி குறுக்கீடு இருப்பது தெளிவாக தெரிகிறுது. ஒரு பொது நலன் வழக்கு (PIL) தாக்கல் செய்யுமாறு மக்களை கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.