சென்னை தரமணியில் புனித பிரான்சிஸ் சேவியோ மெட்ரிக் பள்ளி செயல்படுகிறது. இரண்டு வீடுகளை ஒன்றாக இணைத்து ஒரு குறுகலான கட்டிடத்தை பள்ளியாக பயன்படுத்தி, அதன் மொட்டை மாடியை எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் விளையாட்டு மைதானமாக பயன்படுத்திவந்துள்ளனர்.
இந்த நிலையில் அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் லோகேஷ் என்ற மாணவனை, ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் அடித்ததில் தலையில் வெட்டுவிழுந்துள்ளது.
பள்ளி நிர்வாகம் இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தராமல், அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆழைத்து சென்று சாதாரண கட்டு போட்டு, சட்டையில் உள்ள ரத்த கரையை நீக்க முயற்சித்தனர்.
பள்ளி முடிந்து தலையில் கட்டுடன் வீட்டிற்கு வந்த மகனை உடனே அவரது பெற்றோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆழைத்து சென்று 3 தையல்கள் போட்டுள்ளனர். தகவல் அறிந்த பள்ளி நிர்வாகம், மாணவனின் பெற்றோரை ஆழைத்து 5000 பணம் தருவதாகவும் மேலும் இவாண்டு பள்ளி கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் பேரம்பேசியுள்ளனர் ஆனால் தன் குழந்தைக்கு நடந்ததை போல் வேறு குழந்தைக்கு நடக்க கூடாது என எண்ணிய பெற்றோர் உடனே காவல் துறையில் புகார் அளித்தனர்.
இவ்விவகாரம் குறித்து மாணவனின் பெற்றோரிடம் கேட்ட பொழுது இந்தாண்டு கட்டணம் செலுத்தாததால் தொடர்ந்து தனது மகனை பள்ளியில் தனிமைபடுத்தினர் தேர்வுகள் நெருங்கிவிட்டபொழுதும்கூட புத்தகம் தராமல் இழுத்தடித்ததாக கூறியுள்ளனர்