Share it if you like it
சகோதரத்துவம், சமத்துவம், என்று அடுத்தவர்களுக்கு அறிவுரை வழங்கும் தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள். கேரள மாநிலத்தில் நிகழும் தவறுகளை கண்டும் காணாமல் கடந்து போவது வாடிக்கையான ஒன்றாக திகழ்கிறது.
மருத்துவமனையில் இருந்து தனது தன் தந்தையை வீட்டிற்கு அழைத்த செல்ல ஆட்டோ மருத்துவமனைக்குள் அனுமதிக்காத காரணத்தால். தனது தந்தையை மகன் தூக்கி கொண்டு ஓடும் காணொலி ஏசியா நெட் மற்றும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏழைகளின் பாட்டாளி, தோழர்கள் என்று கூறி கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சியில். இதுபோன்று ஏழைகளுக்கு தொடர்ந்து அவல நிலையே தொடர்கிறது என்று பல சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it