படுகுழியில் இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஆறு இந்தியர்களை நியமித்து டொனால்ட் ட்ரம்ப்- அதிரடி!

படுகுழியில் இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஆறு இந்தியர்களை நியமித்து டொனால்ட் ட்ரம்ப்- அதிரடி!

Share it if you like it

கொரோனா கோர தாண்டவத்திற்கு, வல்லரசு நாடான அமெரிக்கா இன்று ரத்த கண்ணீர் வடித்து கொண்டு இருக்கிறது. படுகுழியில் இருக்கும் அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக. புதிய குழு ஒன்றை அமைத்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இந்தக் குழு, அமெரிக்கப் பொருளாதாரத்தை. மீட்டெடுப்பதற்கான அறிவுரைகளை அமெரிக்க அரசிற்கு வழங்க உள்ளது. இந்தக் குழுவில் சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா, ஐபிஎம் நிறுவனத்தின் அரவிந்த் கிருஷ்ணா, மைக்ரான் நிறுவனத்தின் சஞ்சய் மெஹ்ரோத்ரா, மாஸ்டர் கார்டிலிருந்து அஜய் பங்கா, ஆன் முகர்ஜி ஆகிய ஆறு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவுடன்  முன்னணி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளும் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவை அறிமுகப்படுத்தும் பொழுது, டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

இவர்கள் புத்திசாலியானவர்கள், பிரகாசமானவர்கள், இவர்கள்தான் நமக்குப் புதிய யோசனைகளை வழங்கவுள்ளனர். இந்தப் புதிய குழுவானது, அமெரிக்கப் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு, கொண்டு வர என்னென்ன செய்ய வேண்டும். என்பது குறித்து அமெரிக்க அரசுக்கு, ஆலோசனைகளை வழங்க உள்ளது என்று கூறியுள்ளார்.


Share it if you like it