கேரள கம்யூனசத்துக்கு துணை போகும் திமுகவின் சன் நியூஸ் சேனல் !

கேரள கம்யூனசத்துக்கு துணை போகும் திமுகவின் சன் நியூஸ் சேனல் !

Share it if you like it

  • சற்றுமுன் சன் நியூஸ் சேனலில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் கேரளா மாநிலம் முன்மாதிரியாக இருப்பதாக ஒரு செய்தி வெளியிட்டது.
  • சமீபத்தில் கொரோனா நோய்கிருமியால் கேரளா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கேரளாவை சேர்ந்த சப் கலெக்டர் ஒருவர் கேரளாவிலிருந்து திருட்டுத்தனமாக உத்திர பிரதேசத்திற்கு சென்றுள்ளார். ஒரு உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரிக்கே கேரளா அரசின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான் அவர் கேரளாவிலிருந்து உ.பிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
  • மற்றொரு சம்பவத்தில் கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்கு காய்கறிகளை ஏற்றி செல்லும் லாரியில் கேரளாவில் வேலை செய்யும் பிற மாநில குடிமக்களை வலுக்கட்டாயமாக லாரியில் ஏற்றி கர்நாடகாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர் ஆளுங்கட்சியினர். இந்த தகவல் அறிந்த கர்நாடக அரசு கர்நாடகா கேரளா எல்லையை மூட உத்தரவிட்டது. மேலும் கர்நாடகாவுக்கு வரும் அனைத்து வாகனங்களும் முறையாக பரிசோதித்து அனுப்புமாறு கர்நாடக அரசு எல்லையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதிலிருந்து மக்களுக்கும் கேரள அரசு மீது உள்ள நம்பிக்கை போய்விட்டது என்று தெரிகிறது
  • அதற்குமுன் கேரளாவில் ஊரடங்கு உத்தரவை மீறி ஒரு குடோனில் கம்யூனிஸ்ட் தொழிலார்கள் ஒன்று கூடி மது பாட்டில்களை லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். இதை கண்ட செய்தியாளர் ஒருவர் செய்தி சேகரிக்க அங்கு சென்ற பொழுது தாறுமாறாக அவரை தாக்கியுள்ளனர் அந்த கம்யூனிஸ்ட் தொழிலார்கள். மேலும் அரசின் நிவாரண பொருட்களை ஆளுங்கட்சியினர் அவர்களின் வீட்டிற்கு திருட்டுத்தனமாக எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில் சன் நியூஸ் சேனல் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளாவை உயர்த்தி சொல்லுவது அனைவரையும் நகைப்பிற்குள்ளாக்குகிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

Share it if you like it