Share it if you like it
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரனோ வைரஸ் தாக்கம் குறித்து நேற்று புதன் கிழமை இஸ்ரேலில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரனோ வைரஸ் பரவாமல் இருக்க மக்களுக்கு சில எளிமையான குறிப்புகளை தந்தார், அப்பொழுது ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளும் போது கைகுலுக்காமல் இந்திய முறைப்படி கைகளை கூப்பி நமஸ்தே (வணக்கம்) சொல்லிக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். இந்நிகழ்வு சர்வதேச இந்தியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Share it if you like it