கொரோனாவின் சூழ்நிலையை சாதகமாக்கி பணம் சம்பாதிக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்களே சிறிது மனிதநேயம் காட்டுங்கள் !

கொரோனாவின் சூழ்நிலையை சாதகமாக்கி பணம் சம்பாதிக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்களே சிறிது மனிதநேயம் காட்டுங்கள் !

Share it if you like it

  • டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தினமும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் மோடி கொரோனா நோயை தடுப்பதற்காக நாடு முழுவதும் மூன்று வாரம் 144 தடையை செயல்படுத்தினார். இந்நிலையில் எல்லா ரயில்களும், பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. நாட்டில் சாலைகளில் அனுமதிக்கப்பட்ட ஒரே வாகனம் ஆம்புலன்ஸ்கள் மட்டுமே. தனியார் ஆம்புலன்சில் நோயாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் ஏற்றி செல்ல ஆயிரக்கணக்கான ரூபாய் வசூலிப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
  • பீகாரைச் சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ரூ .50 ஆயிரம் கேட்டதாக கூறினார். மேலும் கண்பார்வை குறைபாடு உடைய நோயாளி ஒருவர் வீட்டிற்கு திரும்பி செல்ல ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ரூ.15 ஆயிரம் கேட்டுள்ளனர்.
  • சோனு சிங் என்பவர் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மார்ச் 22 அன்று தனது மனைவியுடன் எய்ம்ஸுக்கு வந்திருந்தார். நாங்கள் இங்கு வருவதற்கு முன்பு ஒரு பிளேட் உணவின் விலை 20 ரூபாயாக இருந்தது. 144 சட்டம் நடைமுறைப்படுத்திய பிறகு ஒரு பிளேட் விலை 60 ரூபாயாக உயர்ந்துவிட்டது. உணவுக்காக செலவழிக்க எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. நாங்கள் வீட்டிற்கு திரும்ப ​​எந்த வழியும் இல்லை. ஒரு தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் எங்களை வீட்டிற்கு கொண்டு சேர்க்க இறக்க ரூ .20,000 கேட்டார். என் மனைவிக்கு இன்னும் காய்ச்சல் இருக்கிறது. எங்களிடம் இப்போது பணம் இல்லை சொல்லுங்கள், அடுத்த மூன்று வாரங்களுக்கு நாங்கள் என்ன செய்வோம்? ” என்று கண்ணீர் மல்க சோனு கூறினார்.
  • மருத்துவமனைக்கு வந்த மற்றொரு பார்வையாளர் நாதுராம், அவரது குழந்தையின் காலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான வலி ஏற்பட்ட பிறகு, ராஜஸ்தானின் அஜ்மீரில் ஒரு சிறிய கடையை மீண்டும் நடத்தி வரும் அவரது பெற்றோர், மார்ச் 18 அன்று டெல்லிக்கு அழைத்து வந்தனர்.
    கடந்த திங்கட்கிழமை எய்ம்ஸ் OPD பிரிவில் ஒரு மருத்துவரிடம் சந்திப்பு கிடைத்தது. ஆனால் நியமிக்கப்பட்ட நாளில், OPD துறை பொதுமக்களுக்கு திறக்கப்படப் போவதில்லை என்று கூறப்பட்டது, ஏனெனில் மருத்துவமனை அதன் அனைத்து வளாகங்களையும் கொரோனா வைரஸைக் கையாள்வதில் கவனம் செலுத்தியது. எனவே நீண்ட பயணங்களை மேற்கொள்வது அவரின் மகளுக்கு வேதனையாக இருப்பதால் அவர்கள் திரும்பி வீட்டுக்கு போக முடியாத சூழலில் அங்கேயே சிறிது நாட்கள் தங்கினார்கள் . இந்நிலையில் பிரதமர் மோடி 144 அறிவிக்க OPD பிரிவை நிரந்தரமாக மூடி விட்டனர். இதனால் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தபொழுது ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ரூ.16000 ஆயிரம் கேட்டார்கள். அவ்வளவு பணம் இருந்திருந்தால் நான் ஏன் அரசு மருத்துவமனைக்கு வருகிறேன் என்று புலம்பினார். மேலும் எங்கள் பணம் அனைத்தும் எங்கள் மக்களின் சிகிச்சைக்காக செலவிட்டு விட்டோம், தற்போது எப்படி வீட்டுக்கு செல்வது என்று புரியாமல் தவித்து வருகின்றனர்.
  • இதுபோல் ஒரு இக்கட்டான சூழ்நிலை வருமென்று யாரும் அறிந்ததில்லை. இதனால் அரசின் மீதும் குறை சொல்ல முடியாது. அவர்களும் மக்களின் பாதுகாப்புக்காகத்தான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த சூழ்நிலையை சில தனியார் ஆம்புலன்ஸ் வைத்திருப்பவர்கள் தங்களுக்கு சாதகமாக்கி அதில் பணம் சம்பாதிப்பதற்காக ஏழை எளிய மக்களிடம் அதிக பணத்தை கேட்டு வருகின்றனர். உணவு பொருட்களையும் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளனர்
  • உயிரை காட்கும் மிக உயர்ந்த துறை மருத்துவம். அதில் ஆம்புலன்சின் பங்கு முக்கியமான ஒன்றாகும். அதனை வழிநடத்தக்கூடிய டிரைவர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஏனெனில் உயிருக்கு போராடி கொண்டிருப்பவர்களை அவர்களின் உயிரை பணயம் வைத்து மிக விரைவாக ஆம்புலன்ஸை ஓட்டிச்சென்று மருத்துவமனையில் தக்க நேரத்தில் அனுமதித்து அவர்களின் உயிரை காப்பாற்றியுள்ள நிகழ்வை நாம் பலமுறை தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைளிலும் பார்த்திருக்கிறோம். எனவே இதுபோன்று கொஞ்சம் மனிதாபிமானத்துடன் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனர்கள் நடந்துகொள்ள வேண்டும். டெல்லி கெஜ்ரிவால் அரசும் இதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Share it if you like it