தென் கொரியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் கொரோனாவை தடுக்கும் புனித நீர் என்ற பெயரில் எதையோ கொடுத்து 47 பேருக்கு கொரோனாவை பாதிரியார் பரப்பிவிட்டிருக்கிறார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு இதுவரை சுமார் ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில். தென் கொரியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் கொரோனாவை தடுக்க சிறப்பு வழிபாடு ஒன்றினை தேவாலயத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர் இவ்வழிபாட்டில் கொரோனாவை தடுக்கும் சக்தி கொண்ட புனித நீர் என்ற பெயரில் எதோ ஒரு நீரை ஒரே பாட்டிலில் வைத்து அனைவரது வாயிலும் படும்படி பங்கு தந்தை ஊற்றியுள்ளார். இதனால் அவ்வழிபாட்டில் கலந்துகொண்ட 90 பேரில் சுமார் 47 பேருக்கு இது வரை கொரோனா பரவி உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் மற்றவர்களும் பரிசோதிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் குறித்து பேசிய தேவாலய பங்குத்தந்தை நடந்த அனைத்து தவறுகளுக்கும் தான் பொறுப்பேற்பதாகவும் அனைவரும் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கொரோனாவை தடுக்கும் புனித நீர் – பாதிரியார், 40 பேருக்கு பரப்பிவிட்ட கொரோனா
Share it if you like it
Share it if you like it