Share it if you like it
- கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கேரளா அரசு ஒன்றுதான் சிறப்பாக கையாள்வதாக கம்யூனிச ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் தம்மட்டம் அடித்து வருகிறார்கள். கொரோனாவை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் மிக சிறந்த முறையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில் கேரளா அரசு சிறப்பாக கையாள்கிறது மற்ற மாநிலங்கள் சிறப்பாக கையாளவில்லை என்று கூறுவது அபத்தமானது.
- இந்நிலையில் கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையில் கேரளாவில் வெறும் 35,000 மாதிரிகளை மட்டுமே கேரளா பரிசோதித்துள்ளது. ஆனால் கேரளாவை விட தமிழ்நாட்டில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதித்துள்ளது.
- கேரளாவை விட பல மாநிலங்களில் அதிக மக்கள்தொகை இருப்பதால் அதிக மாதிரிகளை பரிசோதித்துள்ளது. மேலும் பல உலக நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுவதற்கான சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் இதனை பயன்படுத்தி அரசியல் செய்கின்ற சில அரசியல் கட்சிகளும், கட்சியின் ஆதரவாளர்களும் தான் கொரோனாவை விட ஆபத்தானவர்கள்.
https://twitter.com/itisatp/status/1258699264051445761?s=20
Share it if you like it