கொரோனா தொற்றின், வீரியத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு, அதிரடி நடவடிக்கைளை பிறப்பித்துள்ளது. கிருமி நாசினி திரவம், முக கவசம், கொரோனா தொற்றின் வீரியத்தை, கட்டுப்படுத்தும் மருத்துவ உபகரணங்கள், ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய, தடை விதித்துள்ளது. நாட்டு மக்களிடையே குழப்பத்தை, விளைவிக்கும் வகையில், வதந்தி பரப்புவோர் மீதும், பொருட்களை பதுக்குவோர் மீதும் நடவடிக்கை பாயும், என்று மோடி எச்சரித்திருந்தார்.

இன்று மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் நர்பத்கிரி சவுக்கில், உள்ள கிடங்கில் புனே குற்றப்பிரிவு காவல்துறை, அதிரடி சோதனை மேற்கொண்டதில், முக கவசங்களை கள்ளச்சந்தையில் விற்க, பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்கள், மீது வழக்கு பதிவு செய்ததோடு கிடங்கிற்கு சீல் வைத்திருப்பது, அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், பதுக்குவோர்களுக்கு சம்மட்டி அடியாக இது, அமைந்துள்ளது என்று பலர் கருத்து, கூறி வருகின்றனர்.
