இந்தோனேசியாவை சேர்ந்த 15 இஸ்லாமிய மதகுருமார்கள் இந்தியாவிற்கு சுற்றுலா விசாவில் வந்துள்ளனர். ஆனால் அவர்கள் விதிகளை மீறி டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மேலும் அந்த மாநாட்டை முடித்துக்கொண்டு கொரோனா நோய் கிருமியை பரப்பும் விதமாக தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகரில் மத்திய, மாநில அரசுகளின் விதிகளை மீறி இஸ்லாமிய மதத்தை பரப்பும் நோக்கில் பிரார்த்தனை நிகழ்வை ஒன்று கூடி நடத்தியுள்ளனர். இதனை வட்ட ஆய்வாளர் இந்திரசேன ரெட்டி கரீம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இந்தோனேசிய இஸ்லாமிய மதகுருமார்கள் 15 பேர் மீதும் ஐபிசி 420, 269, 270,188 மற்றும் தொற்று நோய்கள் சட்டம்- 1897, பேரிடர் மேலாண்மை சட்டம் -2005, 51 [பி ] , வெளிநாட்டினர் சட்டம் – 1946 பிரிவு 14 [1] ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொரோனா நெருக்கடியிலும் மதத்தை பரப்ப வந்த 15 இஸ்லாமிய மதகுருமார்கள் கைது !
Share it if you like it
Share it if you like it