கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமதாஸ் பல்வேறு ஆலோசனைகளை அரசிற்கும், மக்களுக்கும், தொடர்ந்து வழங்கி வருவதோடு மட்டுமில்லாமல் தனது பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்.
அண்மையில் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
புகைப்பழக்கம் உள்ளவர்களை கொரோனா மிகக் கடுமையாக தாக்கும்; உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இது 100% உண்மை. புகைப்பழக்கம் உள்ளவர்கள் நோயிலிருந்தும், உயிரிழப்பிலிருந்தும் காத்துக் கொள்ள புகைப்பழக்கத்தைக் கைவிடுங்கள்!
கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்குடன் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் உடனடியாக அனைத்து வகை புகையிலைப் பொருட்களின் விற்பனையும் தடை செய்யப்பட வேண்டும்!
நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி,
புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது ‘புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்தும்’ என்ற வாசகமும், வழக்கத்தை விட குரூரமான எச்சரிக்கைப் படத்தையும் வரும் செப்டம்பர் முதல் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.#TobaccoKills pic.twitter.com/XaFY3T9JpB— Dr S RAMADOSS (@drramadoss) April 15, 2020