கொரோனா பலி எண்ணிக்கை 18,600 தொட்டது. மோடியின் வேண்டுகோளை பின்பற்றுங்கள் சமூக ஆர்வலர்கள் கருத்து!

கொரோனா பலி எண்ணிக்கை 18,600 தொட்டது. மோடியின் வேண்டுகோளை பின்பற்றுங்கள் சமூக ஆர்வலர்கள் கருத்து!

Share it if you like it

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 18,600 நபர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். ஈரான், இத்தாலி, சீனா ஆகிய நாடுகளில் இந்நோய் தொற்று தனது கோர முகத்தை காட்டியுள்ளது. இந்தியாவில் இதுவரை 562 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் 41 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து விடுதலையாகி வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 23 பேர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அரசு குறிப்பு ஆகும்.

சீனாவை விட இத்தாலியில் தான் இருமடங்கு கொரோனாவால் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பாரதப் பிரதமர் மோடி, நேற்று இரவு நாட்டு மக்களிடம் இக்கொடிய நோயின், வீரியத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மோடியின் கவலையை நாட்டு மக்கள், புரிந்துக்கொள்ள வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் தங்கள், கருத்தினை கூறி வருகின்றனர். பாரதப் பிரதமர் உத்தரவுக்கு இணங்க, இன்று பல்வேறு மாநிலங்கள், அதிரடி கட்டுப்பாடு விதித்துள்ளது.

  1. கொரோனா தொற்றை பரப்பினால் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  2. தடை உத்தரவை மீறி செயல்படும் நபர்களை, சுட்டுத்தள்ள தேவைப்பட்டால் ராணுவத்தை அழைப்போம், என்று தெலுங்கான முதல்வர், சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.

மேலும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

1. கொரோனா சிகிச்சைக்கு மலேரியா தடுப்பு மருந்தினை அதிகம் பயன்படுத்த     வேண்டாம் என்று அனைத்து மாநிலங்களும் மத்திய அரசு அறிவுரை.

2. கை கழுவும் கிருமி நாசினி திரவம், மற்றும் சுவாசக் கருவி, மாஸ்க், உள்நாட்டு         தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய  அரசு தடை விதித்துள்ளது !

 

 


Share it if you like it