போலி செய்தியை வெளியிட்ட டாக்டர் – அதனை மேற்கோள் காட்டி பேசிய ராகுல்காந்தி !

போலி செய்தியை வெளியிட்ட டாக்டர் – அதனை மேற்கோள் காட்டி பேசிய ராகுல்காந்தி !

Share it if you like it

  • ஹரியானா மாநிலம் ரோட்டக்கில் உள்ள PGIMS எனப்படும் அரசு மருத்துவ நிறுவனத்தில் மருத்துவராக டாக்டர். கம்னா கக்கர் என்பவர் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் ட்விட்டரில் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடி வரும் மருத்துவர்களுக்கு கையுறைகள் மற்றும் முகக்கவசங்களை அரசு வழங்கவில்லை. இத்தகைய உபகரணங்கள் இல்லாததால் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த டுவீட்டர் பதிவை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
  • பின்னர் டாக்டர். கம்னா கக்கரை போலீசார் விசாரிக்க எந்த பதிலும் அளிக்காமல் மௌனம் சாதித்துள்ளார். அதன்பின் தனது அக்கவுண்டில் மற்றொரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் போலியான செய்தியை பரப்பி மக்களை பீதியடைய வைத்ததற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன், என்று பதிவிட்டு அதன்பின் தனது ட்விட்டர் கணக்கை நீக்கியுள்ளார்.

மேலும் இதற்கு முன் அசாம் காங்கிரஸ் பிரமுகர் ஹர்ஜீத் சிங் பட்டி என்பவர் போலி செய்தியினை பகிர்ந்து பின் மாட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it