Share it if you like it
- உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கண்டு மக்கள் பீதியில் உள்ளனர். இந்நோய் தாக்குதலிலிருந்து தற்காத்து கொள்ளவும், அதனை கட்டுப்படுத்தவும் விஞ்ஞானிகள் மற்றும் டாக்டர்கள் இரவு பகல் பார்க்காமல் முயற்சி செய்து வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையிலும் ஒரு ஆச்சர்யமான நிகழ்வு நடந்துள்ளது. என்னவென்றால், குரு பகவான் உடன் சனி கூட்டணி ஏற்பட்டு, பிரம்மஹத்தி தோஷம் பெற்று இருப்பதால் புதிய கிருமி நோய் மேற்கு திசையிலிருந்து உருவாகும் என்று ஹிந்துக்களின் விகாரி ஆண்டுக்கான ஆற்காடு பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
- அதுமட்டுமல்லாமல் முன்னரே அந்த பஞ்சாங்கத்தில் கூறியதுபோல பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வானது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அந்த பஞ்சாங்கத்தை முன்கூட்டியே ஆராய்ந்து தெரிந்து வைத்திருந்தால் இந்த வைரசை கட்டுப்படுத்த கூடிய வழியை முன்கூட்டியே அறிந்து தடுத்திருக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ஹிந்து மதத்தின் பஞ்சாங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு புது வித நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
Share it if you like it