Share it if you like it
- உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ், சீனாவின் உகான் நகரில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில் இருந்து உருவானது என்று கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் வெளி உலகுக்கு வரத்தொடங்கியதும் அந்த சந்தையும் மூடப்பட்டது. இன்று வரை அந்த சந்தை திறக்கப்படவே இல்லை. மூடிதான் கிடக்கிறது.
- ஆனால் அந்த வைரஸானது சீனாவின் ஆய்வகத்திலிருந்து உருவாகியதாக அமெரிக்காவின் செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் பரவ துவங்குவதற்கு முன் சீனாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம். தடுத்து நிறுத்தப்படாததால், ஒட்டுமொத்த உலகமும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய தவறு.
- சீனா வேண்டுமென்றே கொரோனாவை பரப்பி இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை 37 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அமெரிக்காதான் அதிகபட்சமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it