Share it if you like it
- சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை என எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
- கொரோனா வைரஸ் இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனை இந்தியா தற்போது தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. இந்நோய் தொற்றினால் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களை கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் சார்க் உறுப்பு நாடுகள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஒன்றிணைந்து ஆலோசித்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இதற்கு பாகிஸ்தான் தவிர மற்ற அனைத்து நாடுகளும் வரவேற்றன. இந்நிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க பாகிஸ்தானும் பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளது.
Share it if you like it