Share it if you like it
- உலகத்தையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸானது முதலில் சீனாவின் வுஹான் என்ற நகரத்தில் உள்ள இறைச்சி கூடத்தில் இருந்துதான் பரவியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சீன விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில் , சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் அநேகமாக’ தோன்றியதாகக் கூறப்படுகிறது.
- மேலும் செவ்வாயன்று, அமெரிக்க பத்திரிகையாளர் தக்கர் கார்ல்சன் ஒரு நிகழ்ச்சியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் சீன கொரோனா வைரஸ் பெரும்பாலும் வுஹான் ஆய்வகத்தில் தோன்றியதாகக் கூறி அந்த அறிக்கையின் கண்டுபிடிப்புக்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
- வுஹான் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து சீன தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் போடோ சியாவோ மற்றும் லீ சியாவோ ஆகியோர் விவாதம் நடத்தினார்கள். அந்த விவாதத்தை மேற்கோள் காட்டி, டக்கர் கார்ல்சன், கோவிட் -19 மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸாக இருப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும், அந்த வைரஸ் ஆய்வகத்திலிருந்து தவறுதலாக வெளியே பரவியதாகவும், மேலும் சீன விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கையையும் மேற்கோள் காட்டி தக்கர் கார்ல்சன் கூறினார்.
Good for @TuckerCarlson for bringing attention to a study by *Chinese* scientists about the origins of the China virus. Not what you’ll hear from MSM. pic.twitter.com/5zOJPOv2pu
— Tom Cotton (@SenTomCotton) April 1, 2020
- மேலும் அந்த வைரஸ் வௌவால்கள் மூலம் பரவுவதாக சீன அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால் வுஹான் இறைச்சி கூடத்தில் வௌவால்கள் இல்லை. அப்படி அங்கு இருந்திருந்தால் அங்கு உள்ளவர்களுக்குத்தான் முதலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். மேலும் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வழக்கு வுஹானில் பூர்வ குடிமக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 900 கி.மீ அப்பால் உள்ள ஒருவருக்கு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதனால் வௌவால்கள் மூலம் மனிதனுக்கு பரவுவது சாத்தியமில்லை. சீன ஆய்வுக் கட்டுரையின் படி, அந்த குறிப்பிட்ட வெளவால்கள் உள்நாட்டில் இருந்த ஒரே இடம் வுஹான் நகரிலிருந்து சில மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு ஆராய்ச்சி நிலையத்திற்குள்தான். கொரோனா வைரஸ் தொற்றுநோய் அந்த ஆய்வகத்திலிருந்து கசிந்ததன் விளைவாக இருக்கலாம் என்று அந்த கட்டுரை வலுவாக முடிவு செய்கிறது.
Share it if you like it