Share it if you like it
- சமீபத்தில் ஜோதிகா சமீபத்தில் விருது விழா ஒன்றில் பேசும்போது, ”தஞ்சாவூரில் படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் தஞ்சை கோவிலின் பெருமையை கூறினார்கள். அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் செல்ல முடியவில்லை. மறுநாள் படப்பிடிப்புக்காக கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் மிகவும் மனம் வேதனை அடைந்தேன். கோவில் உண்டியலில் போடும் பணத்தை மருத்துவமனை மற்றும் பள்ளி ஆகியவற்றிற்கும் கொடுங்கள் என்று பேசினார். ஜோதிகாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல ஹிந்து தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
- அவர் எதையும் ஒப்பிடாமல் பொதுவாக அந்த கருத்தை சொல்லியிருந்தால் இந்த சர்ச்சைகள் உண்டாகியிருக்காது. ஏன் கோவிலை பற்றி சொல்லும்போது தேவாலயம், மசூதிகளையம் சேர்த்து சொல்லியிருக்கலாமே. அது எல்லாம் அப்போது ஜோதிகாவுக்கு ஞாபகம் வரவில்லையா? இவ்வாறு நெட்டிசன்கள் கேள்வி கேட்டுள்ளனர்.
- இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோப ராமானுஜரும் ஜோதிகாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் கோவில் தொடர்பாக நடிகை ஜோதிகா கூறிய கருத்து வருத்தமளிக்கிறது. கோவில்கள் இருப்பதால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதேப்போன்று ஜோதிகாவின் குடும்பத்தார் நிறைய முறை பேசியிருக்கிறார்கள். இப்படி கூறுவது மிகவும் தவறு கண்டிக்கத்தக்கது. இனிவரும் காலங்களில் இந்துமதம் குறித்து இவ்வாறு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Share it if you like it