பசி, பட்டினியில், விவசாயிகள் இருக்கும் பொழுது ஜமாத்துக்கு மட்டும் ஏன்? அரிசி வழங்க வேண்டும்- கிருஷ்ணசாமி ஆவேசம்!

பசி, பட்டினியில், விவசாயிகள் இருக்கும் பொழுது ஜமாத்துக்கு மட்டும் ஏன்? அரிசி வழங்க வேண்டும்- கிருஷ்ணசாமி ஆவேசம்!

Share it if you like it

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஏழை, எளியவர்களுக்கு, சமூக ஆர்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும் பலருக்கு உணவுகள் வழங்க வேண்டும், என்கின்ற நோக்கத்தில் இந்து அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், தங்களுக்கு அரிசி வழங்க வேண்டும், என்று தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை  வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

இல்லாதவனுக்கு எதுவுமே இல்லாதபோது, ரம்ஜான் நோம்பு கஞ்சிக்கு என்று 5,480 மெட்ரிக் டன் அரிசியை, வேண்டாம் வேண்டாம் என்று தீர்மானம் போடக்கூடிய ஜமாத்துகளுக்கு வழங்கி ஏன் வீணடிக்க வேண்டும்?

ஓட்டுகளை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தமிழக அரசு அனைத்து ஜமாத்துகளுக்கும் 5480 மெட்ரிக் டன் அரிசி நோம்பு கஞ்சிக்காக வழங்குவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்த அரிசியை உற்பத்தி செய்த ஏழை, எளிய விவசாயிகள் பசியோடும் பட்டினியோடும் இருக்கும்போது, அவர்களுக்கு இந்த 5,480 மெட்ரிக் டன் அரிசியை பகிர்ந்து அளித்திருக்கலாமே? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளர்.


Share it if you like it