தமிழ் மொழி மீதும், திருக்குறள் மீதும், மிகுந்த அன்பு கொண்டவர் முன்னாள் பா.ஜ.க எம்.பி தருண் விஜய். இவரின் தீவிர முயற்சியால் உத்தரகண்ட் மாநிலத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தமிழர்களின் பெருமையை பறைச்சாற்றியவர். வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழை உயர்த்தி பேசுவதையே தனது கொள்கையாக கொண்டவர் இந்த உத்தரகண்ட் மைந்தன்.
அண்மையில் தருண் விஜய் தனது விட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
ஹிந்துக்களின் கோயில் நிதி மதமாற்றங்களைத் தடுத்தல், குழந்தைகளிடையே ஹிந்து தர்மத்தை பற்றிய புரிதலை மேலும் வலுப்படுத்துதல். இஸ்லாமிய-இடது சாரிகளின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் எதிர்ப்பை உருவாக்குதல்,
சில தீயவர்களின் அட்டூழியங்களுக்கு பலியாகும் தலித்துகளுக்கு உதவ கோயில் நிதியினை பயன்படுத்தாமல் மதச்சார்பற்ற நோக்கங்களுக்காக கோயில் நிதிகளை ஏன்? பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்லாமிய அமைப்புகள், இடது சாரிகளின் அழுத்தம் ஆகியவற்றையும் தாண்டி கோவில்கள் செயல்படுகிறன்றன. ஹிந்துக்களுக்கு அவசியம் உதவி தேவை என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Templefunds of Hindus MUST be spent on efforts to stop conversions,strengthen Hindu dharmic understanding among children,creating intellectual resistance to Islamic-Left assaults,help to dalits who fall victim to atrocities.Why shuld we encourage templefunds for secularpurposes ?
— Tarun Vijay தருண் விஜய் भारत के वीर सैनिकों की जय (@Tarunvijay) April 25, 2020