ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த குப்புசாமி என்பவர், பெருந்துறையில் புகழ் பெற்ற செல்லந்தி அம்மன் கோவில் இடத்தில், கட்டப்பட்ட கடைகளை ஏலத்தில் விட்டு இன்றைய சந்தை விலையில், வாடகை வசூலிக்க உத்தர விட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவை ஏற்று இரண்டு நீதிபதிகளை கொண்ட ’முதல் பெஞ்ச்’ இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்கள் வரலாற்று சின்னங்களாக திகழ்கின்றன. அவை சமூகத்தின் சொத்து, ஆனால் இன்றைய நிலையோ மிகவும் மோசமாக இருக்கிறது. கோவிலின் உண்டியல்கள் உடைக்கப்படுவதும், சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவதும், முறையாக ஆலய சொத்துக்களை கவனிக்க முடியால் இருப்பதும். ஆலயத்தின் பொக்கிஷங்களான சிலைகளை சிதைப்பதும், முறையாக அவற்றை பராமரிக்காமல் மெத்தனமாக இருப்பது கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய நீதிபதி, ஆலயத்தின் கணக்களை நிர்வகிக்க, சிறந்த ஆடிட்டர்களை நியமிக்க வேண்டும். கோவில் சொத்துக்களில் இருந்து வசூலிக்கப்படும் பணத்தை, வேறு எந்த விஷயத்திற்கும் பயன்படுத்த கூடாது. இந்து அறநிலையத்துறை சார்ந்த வழக்குகளை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என ’முதல் பெஞ்ச்’ நீதிபதிகள், உத்தரவிட்டு இருப்பதை அடுத்து, ஊழல் பேர்வழிக்கு இத்தீர்ப்பு சம்மட்டி அடி, என்று சமூக வலைதளங்களில் பலர் நீதிபதிகளுக்கு தங்களது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.