கொரனோ தொற்றிற்கு, எதிராக மத்திய அரசுடன் இணைந்து, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகிறது. மருத்துவர்கள், காவலர்கள, செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், என பலர் இரவு பகலாக அரும்பாட்டு வருகின்றனர்.
உலக சுகாதார அமைப்பு இருமுறைக்கு மேல் இந்தியாவின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் என்று பல நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
திமுக எம்.பி தயாநிதி மாறன் நேற்று ஒரு சிலருக்கு மளிகை சாமான் பொருட்களை வழங்கி விட்டு. வழக்கம் போல் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்தார். பாரதப் பிரதமர் நிவாரண நிதியை மக்களிடம் பெறுவதை.
மக்களே பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறார்கள், முதல்வரும், பிரதமரும், மக்களிடம் பிச்சை எடுக்கிறார்கள். என்று மிக மிக கீழ்த்தரமாக, நாட்டின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
சாமான்யன் எழுப்பிய கேள்விகள்!
- மத்திய அரசுக்கு 1500 கோடி வழங்கியது மட்டுமில்லாமல், 8 கோடி மதிப்புடைய மருத்துவ உபகரணங்களை தமிழக அரசிற்கு வழங்கிய டாடா குழுமம் கூட இவ்வாறு நினைக்கவில்லை.
- ஸ்டெர்லைட் நிறுவனம் பிரதமர் நிவாரண நிதிக்கு 100 கோடி ரூபாயையும், தமிழக அரசிற்கு 5 கோடி ரூபாயையும் வழங்கிய அவர்கள் கூட இவ்வாறு நினைக்கவில்லை
- தமிழ்நாட்டிலேயே முதல் பணக்காரர் என்ற பெருமைக்குரிய நீங்கள் அள்ளி வழங்காமல், கிள்ளி வழங்கி இருப்பது ஏன்?
- தன்னால் இயன்ற, நிதியை வழங்கியவர்கள், மட்டுமில்லாமல் தன் சேமிப்பில், இருந்த உண்டியல் பணத்தை வழங்கிய, குழந்தைகள் கூட இவ்வாறு நினைக்கவில்லை.
- பிரதமரை கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ள, நீங்கள் அதே பிரதமரிடம் தான் உங்கள் தொகுதி மக்களுக்கு, தேவையானவற்றை கேட்க வேண்டும் என்பதை ஏன்? மறந்து விட்டிர்கள்.
- சமூகத்தை சீரழிக்கும் சீரியல் மூலம் கொள்ளை லாபம் பார்க்கும் சன்குழுமம், தனிப்பட்ட முறையில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏன்? நன்கொடை வழங்கவில்லை.
- தங்கள் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கி அதன் மூலம் சன்குழுமம், விளம்பரம் தேடியிருப்பது கேவலமானது, அவமானகரமானது ஆகும்.
- சில மளிகை பொருட்களை வழங்கி விட்டு, மக்களை பிச்சைக்கார்கள் என்று கூறியிருப்பதன் மூலம் உங்களின் பணக்காரர் திமிரை காட்டியுள்ளீர்கள்.
- உணவில் டாடா உப்பை சேர்த்துகொள்பவர்கள் இவர்களின் உண்மை முகத்தை உணர வேண்டும் என்று சாமான்யன் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
it is common to think about others as they themselves are living their own life