சமூக நீதிக்கு சான்றாகும் ABVP – தூய்மைப் பணியாளர்களின் கைகளால் தேசிய கொடி ஏற்ற திட்டம்..!

சமூக நீதிக்கு சான்றாகும் ABVP – தூய்மைப் பணியாளர்களின் கைகளால் தேசிய கொடி ஏற்ற திட்டம்..!

Share it if you like it

உலகில் மிகப்பெரிய மாணவர் அமைப்பாக கருதப்படும் ABVPன் தேசிய செயற்குழுக்கூட்டம் மத்திய பிரதேசம் போபாலில் நடைபெற்றது. இது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

1.கல்வித்துறை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அவற்றை தீர்க்க மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
2.வரும் 75வது சுதந்திர தினத்தை ஒட்டி நாடுமுழுவதும் சுமார் 1லட்சத்தி 25ஆயிரம் இடங்களில் தேசிய கொடி ஏற்றி கோலாகலமாக கொண்டாடவும். அக்கொடிகளை ஏற்ற தூய்மை பணியாளர்கள், விவசாயிகள், முன்களப்பணியாளர்கள் போன்றோரை ஏற்பாடு செய்யவும்
3.சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடங்களை சுற்றுலா தளங்களை அறிவிக்கவும்.
4.தேசிய கல்விக்கொள்கையை அரசு செயல்படுத்த உள்ளதால். ABVP சார்பாக அனைத்து மாநிலங்களிலும் தேசிய கல்விக்கொள்கை சம்பந்தமான கமிட்டிகளை அமைத்து அரசுக்கு ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்க உள்ளதாகவும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் வரும் சுதந்திர தினத்தன்று ABVP சார்பாக சுமார் 1500 இடங்களில் தேசிய கொடி ஏற்றி கோலாகலமாக கொண்டாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Share it if you like it