உலகிலேயே தீவிரவாதிகளுக்கு உதவி தொகை கொடுத்து பாதுகாத்து வரும் ஒரே நாடு எதுவென்றால் அனைவரின் நினைவிற்கும் வரும் நாடு பாகிஸ்தான் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. 1993 மும்பை குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்டவன். இந்தியாவிடம் தாவூத்தை ஒப்படைக்க வேண்டும் என்று பல்லாண்டு காலமாக இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
தாவூத் எங்கள் நாட்டில் இல்லை என்று பச்சை பொய்யை கூறி வந்தது பாகிஸ்தான். 89,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்நாட்டில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர். தாவூத்திற்கு தற்பொழுது கொரோனா தொற்று ஏற்பட்டு, கராச்சி ராணுவ மருத்துவமனையில் மிகவும் ரகசியமாக அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உளவுத்துறை மூலம் இந்தியாவிற்கு இத்தகவல் கிடைத்துள்ளது. பாகிஸ்தானின் உண்மை முகம் என்ன? என்பது தற்பொழுது உலக நாடுகள் மத்தியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு இந்தியாவும், அமெரிக்காவும், தாவூத்தை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.