அமெரிக்கா அத்தூமீறி பாகிஸ்தானில் நுழைந்து ஒசாமா பின்லேடனை சுட்டு கொன்றது. இதனை எங்கள் நாடு ஏற்றுக்கொள்ள முடியாது. ஒசாமா ஒரு தியாகி என்று பிரதமர் இன்ரான் கான் உலக பயங்கரவாதியை புகழ்ந்தது. உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
தீவிரவாதிகள் பாகிஸ்தானிற்கு டென்ஷன் கொடுக்க கூடாது என்பதற்காக பென்ஷன் கொடுத்து அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்து வரும் உலகின் ஒரே நாடாக இன்று வரை அந்நாடு திகழ்கிறது. இப்படிப்பட்ட ஒரு நாட்டை வேறு எங்கும் காண முடியாது என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் நிலையில்.
பாகிஸ்தான் அரசு ஹபீஸ் சயீத் மற்றும் நான்கு முக்கிய பயங்கரவாதிகள் தங்கள் குடும்பத்திற்கு தேவையான பணத்தை வங்கியில் இருந்து எடுக்க அவர்கள் மீதான தடையை ஜ.நா நீக்க வேண்டும் என்று இம்ரான் கான் அரசு முறையிட்டு இருப்பது உலகம் முழுவதும் மீண்டும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.