உத்தரப் பிரதேசத்தில் சின்மயானந்துக்குச் சொந்தமான சட்டக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர், அவருக்கு எதிராகப் பாலியல் புகார் அளித்திருந்தார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, காவல் துறை ஐ.ஜி. தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை உத்தரப் பிரதேச அரசு நியமித்தது. சின்மயானந்த், அவர் மீது புகார் அளித்த மாணவி, அவரது தாயார், ஆண் நண்பர்கள், கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது.
அதைத் தொடர்ந்து, அந்த மாணவி சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில், ஆஜராகி 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். இதற்கிடையே, சுவாமி சின்மயானந்துக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், வெள்ளிக்கிழமை (இன்று) காலை பாலியல் புகார் வழக்கில் சின்மயானந்த் கைது செய்யப்பட்டார்.