விஜயதசமியின் வெற்றி திருநாள் உணர்த்தும் தார்ப்பரியம்

விஜயதசமியின் வெற்றி திருநாள் உணர்த்தும் தார்ப்பரியம்

Share it if you like it

கடந்த 10 தினங்களாக நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டங்கள் களை கட்டியது . வட இந்திய மாநிலங்களில் தசரா விழா என்ற பெயரில் கோலாகலமான உற்சவங்கள் விழாக்களாக நவராத்திரி பண்டிகை முன்னெடுக்கப்பட்டது. விஜயதசமி நாளில் நேற்று தசரா விழாவில் விஜயதசமி நாளில் தீமைகளை அழித்து நன்மைகளை பாதுகாக்கும் விதமாக ராவண வதம் நடைபெற்றது. அந்த தார்பர்யத்தின் அடிப்படையில் தான் இன்றளவும் நாம் ராவண வதம் மூலம் நவராத்திரி பண்டிகைகளை விஜயதசமி உற்சவ நாளில் வெற்றி திருநாளாக கொண்டாடி வருகிறோம். ‌ராமனுக்கும் ராவணனும் அடிப்படையில் இருவரும் மாவீரர்கள் இருவரும் நாடாளும் அரச குலத்தவர். மண்ணையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் இறுதிவரை தங்களின் உயிரை துச்சம் என நினைத்து களம் கண்டவர்கள். ஆனால் ராமன் தர்மத்தின் உறைவிடமாக சத்தியத்தின் பிம்பமாக தர்மத்தின் வழியிலேயே வாழ்ந்து காட்டியவன். என் நிலையிலும் தான் உயர்த்தி பிடிக்கும் தர்மத்தின் நிலையிலிருந்து அடிப்பிறளாமல் எது வந்த போதும் நிலைத்து நின்றவன் .அவன் காத்து நின்ற தர்மம் அவனையும் காத்தது. அவன் தேசத்தையும் மண்ணையும் மக்களையும் காத்தது. அந்த தர்மமே அவனுக்கு வெற்றியையும் தேடிக் கொடுத்தது.

ராவணன் மாவீரன் பன்முக கலைஞன் தூய்மையான சிவபக்தன் என்ற போதிலும் தான் என்ற அகந்தையிலும் தன்னை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்ற ஆன்மீகத்தின் நியதியை மறந்த அதர்மன் . அவனது துர் குணம் அவனை அதர்மத்தின் வழியில் இட்டுச் சென்றது. ஒரு கட்டத்தில் அந்த அதர்மத்தை அவன் முழுவதுமாக தரித்துக் கொண்டு முழு அதர்மையாக பிரபஞ்சத்தின் அச்சுறுத்தலாக மாறி நின்றான்.அவனை அழித்து தர்மத்தை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ராமனுக்கு நேர்ந்தாலும் ராவணனின் பக்தி வீரம் குறைந்தபட்ச நியதிகளை பின்பற்றி வாழ்ந்த கர்ம பலன் யாவும் ராமனுக்கும் ராவணனுக்குமான யுத்தத்தை நீடித்தது. இதன் பொருள் எங்கேனும் ஒரு இடத்தில் ராவணன் தன் தவறை உணர்ந்து பின் வாங்கும் பட்சத்தில் அவனையும் பாதுகாக்க முடியுமா? என்ற கால தேவனின் எதிர்பார்ப்பு மட்டுமே. அது பொய்யாகி போனபட்சத்தில் இராவண வதம் நிகழ்தேறியது. உலகில் அதர்மம் அழிந்து தர்மம் நிலைநிறுத்தப்பட்டது. ஆனால் நவீன யுகத்தில் ஹிந்துஸ்தானத்தின் ராம ராஜ்யத்தில் அதர்மிகளின் வடிவாக இருப்பவர்கள் யாரையும் ராவணன் போல அதர்மிகள் என்று குறிப்பிட்டு பேச முடியுமே தவிர இராவணனைப் போல சுத்த வீரர்கள் என்றோ யுத்தம் நியதிகளை பின்பற்றும் மாவீரர்கள் என்று குறிப்பிட முடியாது.

ராவணன் இடத்தில் இருந்த குறைந்தபட்ச மனிதாபிமானம் நாகரீகம் யுத்தம் நியதிகள் கூட தற்காலத்தில் இருக்கும் தீய சக்திகள் இடம் இல்லை என்பதே நிதர்சனம். இதை பாரதத்தின் சுதந்திர கால போராட்டத்தையும் சுதந்திர பாரதத்தின் அரை நூற்றாண்டு கால கொடூரங்களையும் புரட்டிப் பார்த்தால் கண்ணாரக் காண முடியும். தற்காலத்தில் இருக்கும் அதர்மிகள் எல்லாம் ராவணனை விடவும் பன்மடங்கு அதர்மத்தின் உச்சமாக இருப்பவர்கள். குறைந்தபட்ச நேர்மையும் மனிதாபிமானமும் கூட இல்லாத மனிதர்கள் என்று அடையாளப்படுத்தும் குறைந்தபட்ச தகுதி கூட இல்லாதவர்கள். அதனால் தான் திரும்பிய பக்கமெல்லாம் ஊடுருவி தாக்குதல் மறைந்திருந்து தாக்குதல் கொத்துக்கொத்தாக கொடூரமாக ஆண் பெண் குழந்தைகள் என்று பொதுமக்களை ரத்த வெள்ளத்தில் கொன்று குவிக்கும் கொடூரங்களை அவர்களால் நிகழ்த்த முடிகிறது.

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஆயுத பிரயோகம் இல்லை. பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் பசுவினத்திடம் பகை பாராட்டுவது இல்லை என்ற யுத்த நீதியை போதித்த இதே பாரதத்தில் தான் இன்றளவும் பசுக்கள் கொடூரமாக வதைக்கப்படுகிறது. இந்த தேசத்தில்தான் எதிரிகளிடமிருந்து தங்களின் தன்மானத்தையும் கௌரவத்தையும் பாதுகாத்துக் கொள்ள அரசகுல பெண்கள் தொடங்கி சாமானிய குல பெண்கள் வரையிலும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஜோஹர் என்னும் தீ வளர்த்து புனித அக்னிக்கு தங்களை ஆகுதியாக்கி அதன் மூலம் தங்களின் கௌரவத்தை காத்துக் கொண்டார்கள். மரணித்த பிறகும் தனது சவத்தை கூட எதிரிகளின் கைகளில் அகப்பட விடக்கூடாது என்பதற்காக மட்டுமே உயிரிழக்கும் போது கூட அவர்கள் விஷம் ஆயுதம் ஜலம் என்று சாத்வீகமான மரணங்களை தவிர்த்து அக்னியின் மூலம் மரணம் என்னும் கொடூர மரணத்தை தழுவி கொண்டார்கள். அதன் மூலம் மரணத்திற்கு பிறகு கூட தங்களின் தன்மானத்தை காத்துக் கொண்டார்கள்.

துர்மதியோடு. இந்த பூமியை ஆக்கிரமிக்கவும் இங்குள்ள செல்வங்களை களவாடவும் நிரந்தரமாக இம்மண்ணையும் மக்களையும் கலாச்சார ரீதியாக ஆக்கிரமிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இங்கு பல நூற்றாண்டுகள் படையெடுப்பை தொடர்ச்சியாக நிகழ்த்தி சொல்ல முடியாத கொடூரங்களை அரங்கேற்றியவர்களின் வம்சா வழியாகவும் அவர்களின் வாரிசாகவும் தங்களை குறிப்பிட்டு கொள்பவர்களுக்கு எக்காலமும் இந்த தேசத்தின் பாலும் தர்மத்தின் மீதும் நம்பிக்கையோ புரிதலோ மரியாதையும் வரப்போவதில்லை. அதன் காரணம் அவர்கள் ஒருநாளும் இந்த ஹிந்துஸ்தானத்தின் தர்மத்தின் தாற்பரியத்தை உணரவோ அவர்களின் சந்ததிகளுக்கு உணர்த்தவோ அவர்கள் முன் வர மாட்டார்கள்‌ மாறாக இங்கிருக்கும் மிச்சங்களையும் அழித்து அனைத்தையும் தனதாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே‌ . அதனால் தான் இங்குள்ள பெண்களை ஆக்கிரமித்தால் மக்களையும் மண்ணையும் ஆக்கிரமிப்பது மிக எளிது என்ற தந்திரமாகத்தான் ஹிந்துஸ்தானத்தின் பெண்களை குறி வைத்து நவீன கலாச்சார ஆக்கிரமிப்புகள் காதல் திருமணம் நாடக காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படுகிறது.

இதில் கள யுத்தம் என்று இறங்கி போர்க்களையில் மோதிய ராமன் ராவணனை தனது ராம பானம் கொண்டு அழித்தான். ஆனால் நம் கண் முன்னே இருக்கும் ராவணர்கள் மொழி இனம் மதம் சாதியம் என்னும் ஆயுதங்களைக் கொண்டு இந்த மண்ணையும் மக்களையும் அழிக்க எதிர் நிற்கிறார்கள். அவர்களிடம் இருந்து இந்த தேசத்தையும் தர்மத்தையும் பாதுகாக்க வேண்டும் எனில் இங்கு உள்ளவர்களுக்கு தாய்மொழி புலமையும் தேசியப்பற்றும் கொண்டிருத்தல் அவசியம். சாதிய அடையாளமும் சாதிய பாகுபாடு இல்லாத சம நீதியை தான் இந்துஸ்தானத்தின் தர்மம் போதிக்கிறது என்ற ஆழ்ந்த புரிதல் இருப்பது அவசியம். மொழியும் இனமும் பிராந்தியமும் நமது முகவரிகள்‌ இந்த ஹிந்துஸ்தானத்தின் தேசியமும் தெய்வீகமும் நமது அடிப்படை அடையாளங்கள் என்ற புரிதல் வேண்டும். நமது முகவரிகள் மாறலாம். மாற்றப்படலாம் .சில நேரங்களில் தொலைந்து கூட போகலாம். ஆனால் எந்த நிலையிலும் நாம் இழக்கக்கூடாததும் மாறக்கூடாததும் நமது அடையாளங்கள் மட்டுமே .அந்த பிறவி அடையாளங்களை நாம் இழப்போமானால் அது மொத்தமாக நம்மையே இழப்பதற்கு சமமாகும். அந்த இழப்பும் அதன் தொடர்ச்சியான இழப்புகளும் நம்மால் ஈடு செய்ய முடியாதவை. எந்த நிலையிலும் மீட்டெடுக்க முடியாதவை என்பதை இங்கு உள்ள ஒவ்வொருவரும் உணர்வது அவசியம்.


Share it if you like it