சி.ஏ.ஏ எந்த ஒரு குடிமகனையும் பாதிக்காது பகிரங்கமாக ஒப்புக்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில்!

சி.ஏ.ஏ எந்த ஒரு குடிமகனையும் பாதிக்காது பகிரங்கமாக ஒப்புக்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில்!

Share it if you like it

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அப்பாவி மக்களை தூண்டி நாடு முழுவதும் கலவரத்தை உருவாக்கியதாக எதிர்க்கட்சிகளின் மீது சமூக நோக்கர்கள் தங்களது கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். நேற்று சி.ஏ.ஏ பற்றியும், டெல்லி கலவரம் பற்றியும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விரிவாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்து கூறினார். டெல்லி கலவரத்திற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு, உரிய நீதி வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று எடுத்து கூறினார். மேலும் சி.ஏ.ஏ எந்த ஒரு குடிமகனையும் பாதிக்காது என்பதை ஆதாரத்துடன் எடுத்து கூறினார். இங்கு உள்ள நாடாளுமன்ற  உறுப்பினர்கள் அனைவரும் புத்திசாலிகள், கபில் சிபல் போன்ற மூத்த வழக்கறிஞர் இச்சபையில் உள்ளார். அவராவது சி.ஏ.ஏ சட்டத்தால், என்ன பாதிப்பு ஏற்படும் என்று  கூறமுடியுமா என்று கேள்வி? எழுப்பினார்.

எனது விருப்பம் எல்லாம் சி.ஏ.ஏ சட்டத்தால், யாரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் சொல்ல வேண்டும் என்று உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர், கபில் சிபல், சி.ஏ.ஏ எந்த ஒரு இந்தியரின் குடியுரிமையையும் பறிக்காது என்பதனை, பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இவர் ஏற்கனவே பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சி.ஏ.ஏவை செயல்படுத்துவதை நிறுத்த மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கபில் சிபல் திட்டவட்டமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it