பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நாடுகளில் வாழும் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகள், மறுக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் அவர்களின் மதம் சார்ந்த பண்டிகைகள், விழாக்கள், நிகழ்ச்சி, ஆகியவற்றை கூட அடிப்படை இஸ்லாமிய பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாகவும், கடும் மன உளைச்சல்களுக்கிடையே வாழும் நிலை மற்றும் பிரார்த்தனை உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சூழ்நிலையே அந்நாடுகளில் நிகழ்கிறது.

நேற்று காபூல் ஷோர் பஜார் பகுதியில், உள்ள புகழ்பெற்ற குருத்வாரா சாஹிப் வழிப்பாட்டு தலத்தில், கொரோனா வைரஸ் தாக்கம், குறையும் பொருட்டு பிரார்த்தனை, செய்ய கூடியிருந்த பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் தலைமை கிரந்தி உட்பட 30க்கும் மேற்பட்டோர். தற்கொலை படை பயங்கரவாதிகள் சக்தி வாய்ந்த வெடி குண்டை வெடிக்க, செய்ததில் உடல் சிதறி அவர்கள், இறந்துள்ள செய்தி சீக்கியர்களிடையே கடும், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம், கொண்டு வந்த பொழுது வானத்திற்கும், பூமிக்கும் குதித்தவர்கள் இந்த கொடுர செயலுக்கு, தங்களது கண்டனமோ, ஆர்பாட்டமே, ஏன்? செய்யவில்லை என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.