உலக நாடுகளை ரத்த கண்ணீர் வடிக்க வைத்து விட்டது சீனா என்று வல்லரசு நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு அந்நாடு மறுப்பு தெரிவித்தாலும் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள், தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.
சீனாவிடம் இருந்து அண்மையில் இந்தியா ( rapid testing kits) கருவிகளை இறக்குமதி செய்தது. இந்திய மருத்துவர்கள் இச்சோதனை கருவி வெறும் 5 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது. 80 சதவீதம் வரை துல்லிய முடிவுகள் கிடைத்தால், மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த இயலும் என்று மருத்துவர்கள் கூறினர்.
இதனை அடுத்து சீனாவிடம், அரை மில்லியன் சோதனை, கருவிகளுக்கான ஆர்டர்களை இந்தியா, உடனே ரத்து செய்தது. இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு, நீங்கள், சோதனை கருவிகளை, தவறாகக் கையாண்டுள்ளீர்கள் என்று அந்நாடு இந்தியாவை குற்றம் சாட்டி உள்ளது.
இச்செய்தி உலக நாடுகள், மத்தியில் பெரும் பரபரப்பை, ஏற்படுத்தியுள்ளது. இந்தியா 50 நாடுகளுக்கு மேல் மனிதாபிமான, அடிப்படையில் மருந்து, பொருட்களை ஏற்றுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.