பசியால் வாடிய மக்கள் தேடி ஓடிய ஆர்.எஸ்.எஸ்!

பசியால் வாடிய மக்கள் தேடி ஓடிய ஆர்.எஸ்.எஸ்!

Share it if you like it

ஊரடங்கு உத்தரவு காரணமாக பஸ், ரயில் வசதி, இல்லாத காரணத்தால் பலர் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளியவர்களின், இருப்பிடங்களுக்கே சென்று பல தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை தொடர்ந்து  வழங்கி வருகின்றனர்.

blank

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், செம்பாக்கம் பகுதியில் ஆந்திர மாநில கட்டிடத் தொழிலாளர்களுக்கு, போதிய உதவிகள் கிடைக்கவில்லை, என்று நேற்று மாலை புதிய தலைமுறை சேனல் செய்தி ஒன்றினை வெளியிட்டது.

blank

ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்கள் திரு. நரசிம்மன், சண்மூகம் பாலா, கோபி, சந்தோஷ், சரவணன், செய்தி அறிந்த உடனேயே களத்தில் இறங்கி அப்பகுதி மக்களை தொடர்பு கொண்டனர்.

blank

இதனை அடுத்து அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, என்று 800 ரூபாய் மதிப்புள்ள மளிகை சாமான்களை வழங்கியுள்ளனர். சேவா பாரதி ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட நாளில் இருந்து இன்று வரை 80,000 ஆயிரத்திற்கும்

மேற்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்கியுள்ளது. கபசுரக் குடிநீர், மருத்துவ உபகரணங்கள், நரிகுறவர்களின் குழந்தைகளுக்கு பால் பாக்கெட் போன்ற அத்தியாவசிய பொருட்களை  தொடர்ந்து வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it